முக்கிய ஏழு நகரங்களில் வீடு விற்பனை 14% சரிவு
புதுடில்லி: நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் புதிய வீடுகளின் விற்பனை, எண்ணிக்கை அடிப்படையில் 14 சதவீதம் சரிந்துள்ளதாக 'அனராக்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக சென்னையில் மட்டும் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு விற்பனை எண்ணிக்கை நான்கு சதவீதம் குறைந்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நடப்பாண்டும் சரிவு கண்டுள்ளது. விலை உயர்வு காரணமாக, மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எண்ணிக்கை குறைந்திருந்தாலும் விற்பனை மதிப்பு அதிகரித்துள்ளது.
@block_B@ சரிவுக்கான காரணங்கள்: * வீடுகளின் விலை உயர்வால், நடுத்தர மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது * கட்டுமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஆடம்பர வீடுகளை கட்டுவதில் கவனம் * இதனால், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் வருகை குறைந்துள்ளது * நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கட்டுமான நிறுவனங்களால் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர இயலாதது * புவிசார் அரசியல் பதற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு, அமெரிக்க வரி விதிப்பு ஆகியவை சந்தையில் ஒருவித தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளனblock_B
@block_B@ வீடு விற்பனை 2024 2025 மாற்றம் (%) எண்ணிக்கை 4.60 3.96 13.91 (சரிவு) மதிப்பு 5.68 6.00 5.63 (உயர்வு)block_B
@block_B@ நகரம் விற்பனை எண்ணிக்கை மாற்றம் (%) 2024 2025 மும்பை 1,55,335 1,27,875 18 (சரிவு) புனே 81,090 65,135 20 (சரிவு) பெங்களூரு 65,225 62,205 5 (சரிவு) டில்லி 61,900 57,220 8 (சரிவு) ஹைதராபாத் 58,540 44,885 23 (சரிவு) சென்னை 19,220 22,180 15 (உயர்வு) கொல்கட்டா 18,335 16,125 12 (சரிவு) மொத்தம் 4,59,645 3,95,625 14 (சரிவு)block_B
@block_B@ இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு: ரூ. 45 லட்சம் கோடி முக்கிய ஏழு நகரங்களின் வீடு விற்பனை மதிப்பு ரூ. 6 லட்சம் கோடிblock_B
மேலும்
-
ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை
-
அரசு தாவரவியல் பூங்காவில் புதிய 'ஆர்கிட்' மலர்கள்
-
துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
-
திருமூர்த்திமலை ரோட்டில் ஆக்கிரமிப்பு; திணறும் வாகன ஓட்டுநர்கள்
-
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்