உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு

28


சென்னை: ''ஜிடிபி குறித்து காங்கிரஸ் நிர்வாகி கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. உபி., உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.


காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவரும், ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, '2010ல் உ.பி.,யின் கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.'ஆனால், இப்போது கடன் வாங்குவதில் உபியை தமிழகம் விஞ்சி விட்டது' எனக்கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.



இந்நிலையில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். காங்கிரஸ் தலைவரும், திமுக தலைவரும் பேசி முடிவு செய்வார்கள்.

அவசியமில்லை



ஜிடிபி குறித்து காங்கிரஸ் பிரவீன் கூறியதில் உடன்பாடு கிடையாது. இந்திய மாநிலங்களில் தமிழகம் தான் கடந்தாண்டு அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது என நிடி ஆயோக் அறிக்கை கொடுத்துள்ளது. உபி உடன் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நிறைவேறாது



ஜிராம்ஜி என்ற வார்த்தைக்கு விளக்கத்தை சொல்ல முடியுமா? எந்த இந்தி சொற்களை அது குறிக்கிறது என சொல்ல முடஇயும். ஜி,ஆர்,எம்,ஜி என்றால் என்ன என சொல்ல முடியுமா? பல எம்பிக்கள் என்ன என கேட்கின்றனர்.
இந்த திட்டத்தில் குறைகள் உள்ளன. உத்தரவாதம் இல்லை. மத்திய அரசு, மாநில அரசின் உத்தரவாதம் இல்லை.
மொத்த செலவில் 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என்கின்றனர். ஏற்கனவே பல மாநிலங்கள் நிதி ஆதாரம் குறைந்தவையாக உள்ளன. 40 சதவீதம் மாநில அரசின் பொறுப்பு என்றால் எந்த மாநிலத்திலும் நிறைவேறாது.
பாஜ அரசு, முந்தைய காலத்தில் சராசரியாக 50 நாட்கள் தான் வேலை கொடுத்துள்ளனர். இப்போது 100 நாட்கள் கொடுக்க வழியில்லை. 125 என்கின்றனர். ஏன் அத்தோடு நிறுத்திவிட்டார்கள். 365 என சொல்ல வேண்டியது தானே. 125 சொன்னாலும் ஒன்று தான். 365 நாட்கள் என சொன்னாலும் ஒன்றுதான்.

மக்களுக்கு தெரியும்



இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி பிப்.,15ல் பேசிய பேச்சை நினைவுபடுத்துகிறேன்.
'' இந்த திட்டத்தை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் இந்த திட்டத்தை ஒழிக்க மாட்டேன். எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்றால், திட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஐமு கூட்டணி படுதோல்விக்கு நினைவுச்சின்னமாக இந்த திட்டம் இருக்கும்'' என்றார்
அவரால் நிறைவேற்ற முடியாது என்று எங்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.வேலைவாய்ப்பு திட்டத்தை அவர்கள் ஒழித்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததை காங்கிரஸ் கண்டிக்கிறது.

துணைவேந்தர் நியமனம்



பல மாநிலங்களில் துணைவேந்தர்களை அரசு நியமிக்கிறது. இங்கு கவர்னர் நியமிப்பார் என சட்டம். இதுபோன்ற கவர்னர் வருவார் என சட்டத்தை இயற்றியவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலம், கட்டடம் அரசுக்கு சொந்தமானது. ஆசிரியர்களை அரசு நியமிக்கும்போது துணைவேந்தர்களை ஏன் அரசு நியமிக்கக்கூடாது.
மத்திய பல்கலைக்கு மத்திய அரசு தானே துணைவேந்தரை நியமிக்கிறது. இங்குள்ள பல்கலைக்கு துணைவேந்தர்களை ஏன் மாநில அரசு நியமிக்கக்கூடாது. இதற்கு கவர்னர், ஜனாதிபதி பதில் சொல்லவில்லை. காலத்துக்கு ஏற்ப சட்டத்தை மாற்ற வேண்டும்

பென்சன் திட்டம்



புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது வாஜ்பாய் அரசு. இதனை ஐமு அரசு அறிமுகம் செய்தது. மத்திய அரசு ஊழியர்கள் போராடிய போது ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை மோடி அரசு நியமித்தது. அக்குழு பலரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், புதிய பென்சன் திட்டம் வேண்டும் என்றால் அதில் தொடருங்கள். மாற்றாக ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் அறிமுகம் செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை மோடி அரசு அமல் செய்து வருகிறது
தற்போது, தமிழகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு நேற்று அறிக்கை கொடுத்துள்ளது.

அரசின் அறிக்கை வரட்டும். மோடி அரசு அமல் செய்கின்ற புதிய திட்டத்தை ஒட்டி தான் தமிழக அரசு அறிக்கை இருக்கும் என நினைக்கிறேன் யூகிக்கிறேன். பார்க்கலாம்.

பழக்கம்



திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக ஒரு பழக்கம் இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுக்கு முன்பு வந்த செய்தி கூடபத்திரிகையில் வந்துள்ளது. எந்த பழக்க வழக்கங்கள் வழிபாடு நிலையங்களில் இருக்கிறதோ அதை மாற்ற முயற்சி செய்யக்கூடாது. தொன்று தொட்டு எந்த பழக்க வழக்கம் இருக்கிறதோ அதை கடைபிடிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

மக்கள் முடிவு



விஜய் எதிர்க்கட்சி தலைவராக வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.யார் எதிர்க்கட்சியாக வந்தால் என்ன?ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இருப்பது தான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி, என்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்.மற்ற கருத்துகள் மிகைப்படுத்துப்படுகிறது எனது கருத்து மிகைப்படுத்தப்படலாம். எனது கருத்து பயனே கிடையாது.திமுக தலைவர் காஙகிரஸ் தலைவர் எடுப்பது தான் நிலைப்பாடு. முடிவு.

தனிப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ,நபர்கள் தங்களது கருத்துக்களை சொல்லாம். பேச்சுரிமை உள்ள கட்சி. முடிவு எடுப்பது திமுக, காங்கிரஸ் தலைவர் எடுப்பது தான் முடிவுதனி மனிதனின் பேச்சுரிமை வேறு. கட்சியின் முடிவு வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement