நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை
சென்னை: '' நிர்வாக சீர்குலைவை தமிழகம் இனியும் தாங்கிக் கொள்ளாது,'' என தமிழக
பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் வாகனம் மோதியதை தட்டிக்கேட்ட ஒரே காரணத்துக்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ் என்பவர் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கையில் பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் ஸேரன், சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
திமுகவின் பிரிவினைவாத அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. வெறுப்புணர்வு இயல்பாக்கப்படுவதும் அரசியல் லாபத்துக்காக ஒருவரது அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போதும் வன்முறை நிகழ்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. இத்தகைய நிர்வாக சீர்குலைவைத் தமிழகம்இனியும் தாங்கிக்கொள்ளாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
அது எப்படி ஓவியாரே...பிஜேபி அல்லது அண்ணாமலை பேரை கேட்டாலே இப்படி கதி கலங்குது
ஓவியரே பல முறை சொல்லியாச்சு... எவளோ கதறினாலும் உனக்கு இருநூறு மட்டுமே....
Annamalai is a capable leader who can retrieve TN from the present mess in which an individual is not safe.மேலும்
-
'சேவை செய்யும் எண்ணத்தை சிறுவயது முதல் வளர்க்கணும்'
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு