சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டினரும் வீடு வாங்கலாம்: புதிய சட்டம் அமலுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வெளிநாட்டினரும் வாங்கும் வகையில், புதிய சொத்துரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, மக்கா, மதீனா, ஜெட்டா மற்றும் ரியாத் ஆகிய நகரங்கள் தவிர, பிற இடங்களில் வெளிநாட்டினர் வீடுகள் வாங்கலாம்.


சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் என்றால், மக்கா, மதீனா தவிர்த்து, பிற நகரங்களில் தங்களது பெயரில் வீடு வாங்கலாம். மக்கா, மதீனா ஆகிய இரண்டு நகரங்களில் முஸ்லிம்கள் மட்டுமே சொத்து வாங்க முடியும் என்பது நீடிக்கிறது. சவுதியில் வசிக்காத வெளிநாட்டினர், அதிகாரிகள் ஒப்புதல் அளித்த குறிப்பிட்ட இடங்களில் வீடு வாங்க முடியும்.


மேலும், வணிகம், தொழில் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான நிலங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி, வெளிநாட்டினர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். வெளிநாட்டினருக்கு சொந்தமான பட்டியலிடப்படாத நிறுவனங்கள் எனில், ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சொத்துகள் வாங்க முடியும்.


சவுதி கம்பெனிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனம் எனில், விதிகளின் கீழ் ஒப்புதல் அளிக்கப்படாத வெளி இடங்களில், வணிக செயல்பாடுகள் அல்லது தொழிலாளர்கள் தங்குமிடத்துக்கு வாங்க முடியும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் சிறப்பு நோக்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மக்கா, மதீனா உட்பட சவுதி அரேபியா முழுவதும் சொத்துக்களை வைத்திருக்க அனுமதி உண்டு.

Advertisement