பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு மீண்டும் முதலிடம்
பெங்களூரு: 2025 ஆம் ஆண்டிற்கான, இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
வேலை செய்யும் இடங்களின் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் அவதார் குரூப் என்ற நிறுவனம், பெண்களின் பங்களிப்பு, பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு(2025) நாட்டில் உள்ள 125 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் பெங்களூரு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.பெண்கள் நடத்தும் ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு ஈர்ப்பதில் பெங்களூரு முதன்மையான மையமாகத் திகழ்கிறது.
அடுத்து, சென்னை, புனே, ஐதாராபாத், மும்பை, குருகிராம், கோல்கட்டா, ஆமதாபாத், திருவனந்தபுரம், கோவை ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.பெண்களுக்கான சிறந்த 5 நகரங்கள் (2025 தரவரிசை):
பெங்களூரு, கர்நாடகா (உள்ளடக்கிய குறியீடு: 53.29)
சென்னை, தமிழ்நாடு ( 49.86)
புனே, மஹாராஷ்டிரா (46.27)
ஐதராபாத், தெலுங்கானா ( 46.04)
மும்பை, மகாராஷ்டிரா (44.49)
பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், பாதுகாப்பு, பொதுச் சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதி போன்ற சமூக உள்ளடக்கம் சார்ந்த காரணிகளில் சென்னை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த குருகிராம், இந்த ஆண்டு 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மிகவும் உள்ளடக்கிய நகரங்கள் பட்டியலில் தென்னிந்திய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 10 இடங்களில் ஐந்து நகரங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை.
இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி செய்கிறது. ஆனால், முதல் 5 இடங்களில் பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள நகரங்கள் தான் இந்த பட்டியலில் இருக்கிறது. தென்னிந்தியாவில் மட்டும் தான் இன்னும் ஏதோ மிச்சமிருக்கிறதாக தோன்றுகிறது.
பெண்கள் பாதுகாப்பு குறைபாடு விஷயத்தில் தமிழகம் எப்பொழுதும் முதலிடம்.
யோவ் கிறுக்கா... நீ எப்பவுமே... அரைகுறைதான் போலிருக்கு. இந்த பதிவை சரியா படி... பெங்களூர் எதில் முதலிடம்...னு போட்டுட்டு... அடுத்து பெண்கள் பாதுகாப்பில் எப்போதும் போல சென்னைதான் முதலிடம்னு போட்டிருக்கு பாரு...? வேணும்னா... கண் கண்ணாடியில் பவர் கொஞ்சம் அதிகமாக்கிட்டு பார்... நல்லா தெரியும்...?மேலும்
-
அமெரிக்காவின் நலனுக்காக போராடுகின்றனர்: ஈரான் மதகுரு கமேனி காட்டம்
-
அமெரிக்காவில் 3 குழந்தைகளின் தாயார் சுட்டுக்கொலை: அதிகாரிகளுக்கு எதிராக வெடித்தது போராட்டம்
-
வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
-
அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
-
அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் முதல்வருக்கு தெரியவில்லை: அண்ணாமலை
-
ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 8 பேர் பலி