தஞ்சையில் விஜய் பொதுக்கூட்டம் முதல் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 04) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
* தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். ''தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்காது. மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். கமிஷன் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்போம்'' என விஜய் வாக்குறுதி அளித்தார்.
* காங்கிரஸ்- திமுக கட்சி இடையே இன்று 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்று முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.
* தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி சந்தித்து பேச்சு நடத்துகிறது. 15 தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் வழங்குகிறது.
* சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் இன்று மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
* தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசிநாள். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இன்று வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது.
* ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, இன்று வியட்நாமை எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
* இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. வண்ணங்களின் பண்டிகையான இன்றைய 'ஹோலி' நாளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும்.
வாசகர் கருத்து (1)
raja - ,
04 மார்,2026 - 13:28 Report Abuse
கூட்டத்தில் விஜயின் பேச்சு சிறப்பாக அமைந்தது 0
0
Reply
மேலும்
-
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
-
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்
-
"நன்றி டாலி! உன் தேசப்பணி மகத்தானது."
-
லெபனானுக்குள் நுழைந்தது இஸ்ரேல்; குடியிருப்புகள் மீது குண்டு வீச்சு
-
துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்
-
'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்
Advertisement
Advertisement