பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
ஆற்காடு : ஆற்காடு அருகே பைக் விபத்தில், இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மேல்விஷாரத்தை சேர்ந்தவர் அமீன், 21. இவரது நண்பர்கள் ஏஜாத், 20, அப்பாஸ், 21. மூவரும் ராணிப்பேட்டையில், ஷூ கம்பெனியில் வேலை பார்த்தனர். நேற்று மதியம், மூவரும் தென்நந்தியாலத்தில் இருந்து மேல்விஷாரம் நோக்கி, டூ - வீலரில் வந்தனர். மேல்விஷாரம் குளோபல் இன்ஜீனியரிங் கல்லுாரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால், அணுகு சாலை வழியாக டூ - வீலரில் சென்றனர். எதிர்பாராத விதமாக, சாலை தடுப்பில் டூ - வீலர் வேகமாக மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்து அமீன், ஏஜாத் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., வீரர் ஒப்பந்த சர்ச்சை * பி.சி.சி.ஐ., விளக்கம்
-
சென்னைக்கு வரம் சஞ்சு சாம்சன்: ரசிகர்கள் ஆர்வம்
-
ஆப்கனில் விடிய விடிய பாக்., விமானப்படை தாக்குதல்; தக்க பதிலடி கொடுப்போம் என தலிபான் எச்சரிக்கை
-
டுப்ளான்டிஸ் உலக சாதனை * போல் வால்ட் போட்டியில்
-
டேபிள் டென்னிஸ்: பவினா படேல் தங்கம்
-
அமெரிக்க தாக்குதலில் மாணவியர் பலி: ஈரானுக்கு ரூ.1.84 கோடி வழங்கியது சீனா
Advertisement
Advertisement