பாக்., வீரர் ஒப்பந்த சர்ச்சை * பி.சி.சி.ஐ., விளக்கம்
புதுடில்லி: இங்கிலாந்தில் 'தி ஹண்டிரடு' (100 பந்து) கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 21-ஆக. 16ல் நடக்க உள்ளது. லீட்ஸ், லண்டன், பர்மிங்காம் உட்பட 8 அணிகள் களமிறங்க உள்ளன. இதில் லீட்ஸ் அணி உரிமையாளராக, இந்தியாவின் பிரிமியர் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணி உள்ளது.
நேற்று 'தி ஹண்டிரடு' தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நடந்தது. பாகிஸ்தான் 'ஸ்பின்னர்' அப்ரார் அகமதுவை, ரூ. 2.34 கோடிக்கு லீட்ஸ் அணி வாங்கியது. இத்தொடரில் இந்திய குழுமத்தால் (ஐதராபாத்) ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரரானார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு இல்லாததால், 2009ல் இருந்து பிரிமியர் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில்லை. தென் ஆப்ரிக்காவின் எஸ்.ஏ. 'டி-20' தொடரில் பங்கேற்கும், ஐதராபாத்தின் ஈஸ்டர்ன் கேப் அணியும், பாகிஸ்தான் வீரர்களை வாங்கியது இல்லை. தற்போது, ஐதராபாத் அணி தரப்பில் லீட்ஸ் அணிக்காக அப்ராரை வாங்கியதால், இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,'' இது பிரிமியர் தொடர் அல்ல. 'தி ஹண்டிரடு' அல்லது வெளிநாடுகளில் நடக்கும் தொடர் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இவ்விஷயத்தில் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார்.
மேலும்
-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்; ரொக்கப்பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு
-
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
-
காங். வேதனையை கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
5 ஆண்டில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி; முதல்வர் ஸ்டாலின்
-
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்தது; தமிழக பக்தர்கள் பலி
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது