இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு

டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டுள்ளார்.



ஈரானின் தனி ராணுவ அமைப்பாக திகழும் ஐஆர்ஜிசி உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு தூணாக உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்களையும் பயன்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது. மேலும், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவு அளித்து பயிற்சி மற்றும் ஆயுதங்களையும் இந்த அமைப்பு சப்ளை செய்து வருகிறது. இதனால், அமெரிக்கா, கனடா ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஐஆர்ஜிசியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரான் ராணுவத்தை விட கூடுதல் அதிகாரம் படைத்ததாகவும் உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் முகமது பாக்பூரை பிப்.,28 ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி கொன்றன.



இந்நிலையில், அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஆக இருக்கும் முகமது நயேயினியும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை அந்த அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisement