பொன்னேரியில் கொள்முதல் செய்த நெல்லிற்கு பணம் கிடைக்கவில்லை விவசாயிகள் பரிதவிப்பு
பொன்னேரி: பொன்னேரி பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல்லுக்கு ஒரு மாதமாக பணம் கிடைக்காததால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு, 1.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, கடந்த மாதம் அறுவடை நடந்தது.
விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 60, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம், 13 என, 73 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
பொன்னேரி பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதால், விவசாயிகள் அங்கு நெல்லை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனத்தின் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு, ஒரு மாதமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது.
மடிமைகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சத்திய நாராயணன் கூறியதாவது:
கடந்த மாதம் 15ம் தேதி, அறுவடை செய்த நெல் மூட்டைகளை, பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தேன். ஒரு மாதமாகியும், இதுவரை எனக்கு பணம் வரவில்லை.
அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும், குடும்ப செலவினங்களுக்கு பணம் இல்லாமலும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன்.
மேலும், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பணம் கிடைக்காமல் ஒரு மாதமாக காத்திருந்து தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
-
தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'