இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை: பிரேமலதா
சென்னை: அங்கீகாரம் இல்லாத கட்சி தேமுதிக என்ற இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை. ஏன் அவர் அப்படி சொன்னார் என்பது குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விருத்தாசலம் எப்போதும் தேமுதிகவின் கோட்டை. விஜயகாந்த்துக்கு முதலில் வெற்றியை கொடுத்த தொகுதி. எங்களின் உணர்விலும், ரத்தத்திலும் உள்ள தொகுதி. இந்தாண்டு மாநாட்டை முதலில் விருத்தாசலத்தில் தான் நடத்தினோம். தேமுதிகவும், விருத்தாசலமும் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். ஏற்கனவே எம்எல்ஏக்களாக இருந்த 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதாப் மற்றும் விஜயபிரபாகரன் என்ற இரண்டு இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.
பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோருக்காக அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற விருகம்பாக்கம், எழும்பூர் தொகுதிகளை கேட்டோம். ஆனால், இந்த முறை சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தான் என எங்களிடம் முன்னரே கூறிவிட்டனர். இதில் மன வருத்தம் கிடையாது. நாங்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் எங்களின் வலதுகையாக இருந்து பணியாற்றுவார்கள்.
பல்லாவரம் தொகுதியை அனகை முருகேசனுக்கு கொடுத்துள்ளனர். அவர் ஏற்கனவே செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றவர். இருந்தாலும் இம்முறை பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார். எங்களுக்கு கிடைத்த தொகுதியை மனப்பூர்வமாக ஏற்கிறோம். எங்கள் பணி மக்களுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்ற இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளத்த பிரேமலதா, ' 3வது அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக என உலகில் அனைவருக்கும் தெரியும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் தான் அத்தனை தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஏன் அவர் அப்படி சொன்னார் என அவரிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.
வாசகர் கருத்து (17)
சாமானியன் - ,
29 மார்,2026 - 21:41 Report Abuse
சட்டசபையில் புரட்சித் தலைவி முன்பே விஜயகாந்த் உதட்டை பிதுக்கி அநாகரியமாக செய்தது மறக்க முடியாது. எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
29 மார்,2026 - 21:08 Report Abuse
அறிவு. முதலில் தேர்தல் ஆணைய வெப்சைட்டில் போய் பார்க்கவும். உங்கள் கட்சி அங்கீகார படாத மாநில கட்சி என குறிப்பிடபட்டிருக்கிறது. படிக்கவும் தெரியாது. உம். பணம் மட்டும் எண்ணுவதற்கு தெரியும். 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
29 மார்,2026 - 20:27 Report Abuse
வடிவேலு தேமுதிகவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்யப்போறாராமே 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
29 மார்,2026 - 19:49 Report Abuse
பெட்டி பிரேமா 0
0
Reply
Seenu - ,இந்தியா
29 மார்,2026 - 19:40 Report Abuse
எங்கள் குடும்பத்தில் தற்போது மூன்று பேர் மட்டும் தேர்தல் களத்தில் வந்துள்ளோம்..இனியும் காலத்திற்கு தைவைப்படும் எனில் கேப்டன் குடும்பஉறுப்பினர் அனைவரும் மக்கள் தொண்டாற்ற தயார் என செயற்குழு பொதுக்குழு கேப்டனின் தொண்டர்கள் முடிவு செய்ததை மீற இயலாது .. எனவே கேப்டன் குடும்பம் வாழவும் ..சார்ந்த தொண்டர்கள் தினமும் கடற்கரை வந்து கொடுக்கப்படும் உணவை சாப்பிட்டு தெம்பாக இருக்கலாம்... 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
29 மார்,2026 - 18:36 Report Abuse
நாயா பேயா அலைந்து திரிந்து மூன்று கட்சிகளிடம் பேசி, விஜயகாந்த் மனசாட்சியே ஒத்துக்கொள்ளாத திமுக கூட்டணியில் ஐக்கியம். பலன் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் தெரியும். 0
0
Reply
sankar - trichy,இந்தியா
29 மார்,2026 - 18:29 Report Abuse
10 சீட்டு பல நூறு கோடி அங்கீகார கொடுத்த உங்க அண்ணா ஸ்டாலின் இன்னோம் திருப்தி இல்லையா அங்கீகாரம் கிடைச்சிருச்சுன்னு சொல்லலாமே 0
0
Reply
Ravi - oddanchatram,இந்தியா
29 மார்,2026 - 17:45 Report Abuse
The Election Commission of India withdrew the state party recognition of Desiya Murpokku Dravida Kazhagam DMDK in 2019. 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
29 மார்,2026 - 17:45 Report Abuse
தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும் ...இந்த அம்மா ஆட்டம் அடங்க வேண்டும் ... 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 மார்,2026 - 17:21 Report Abuse
விசயகாந்தை விலைபேசிய கட்சி 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement