ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம்: பொருத்தும் பணி
சிவகங்கை:-நான்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் பெயர், சின்னத்தை ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி (ஏப்., 16) நடக்கிறது. மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் கட்சிகள், சுயேச்சைகள் என 71 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 1,518 ஓட்டுச்சாவடிகளில் ஏப்., 23 அன்று தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக, ஓட்டுப்பதிவு, ஓட்டு உறுதி படுத்தும் இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடங்களில் நடைபெறும். அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர் தலைமையில் இப்பணி நடைபெறுகிறது. பதிவேற்றப்பட்ட வேட்பாளர் பெயர், சின்னம் விபரத்தை உறுதிபடுத்த மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்படும். அந்தந்த வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் இதில் பங்கேற்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement