பொய்யப்பாக்கம் கிராமத்தில் 97 சதவீதம் ஓட்டுகள் பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில், பொய்யப்பாக்கம் கிராம ஓட்டுச்சாவடியில் 97 சதவீத ஓட்டுகள் பதிவானது.

விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொய்யப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடி எண்.285ல் மொத்தம் 600 ஓட்டுகளில், 581 ஓட்டுகள் (96.8 சதவீதம்) பதிவானது.

இதேபோல் நரையூர் ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்308ல் 625 ஓட்டுகளில், 601 ஓட்டுகள் (96.6 சதவீதம்), பிள்ளையார்குப்பம் ஊராட்சியில் ஓட்டுச் சாவடி எண்.239ல் மொத்தம் 438 ஓட்டுகளில், 422 ஓட்டுகள் (96.35 சதவீதம்), இளங்காடு ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்.315) எண் மொத்தம் 545 ஓட்டுகளில், 525 ஓட்டுகள் (96.3 சதவீதம்), பரசுரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்.336ல் மொத்தம் 923 ஓட்டுகளில், 889 ஓட்டுகள், மேல்பாதி ஊராட்சியில் ஓட்டுச்சாவடி எண்.238ல் மொத்தம் 1,156 ஓட்டுகளில், 1,113 ஓட்டுகள் பதிவானது.

இதேபோல், விழுப்புரம் நகராட்சி வி.பி.எஸ்., பள்ளி ஓட்டுச்சாவடியில் மொத்தம் 660 ஓட்டுகளில், 432 ஓட்டுகள் (65.4 சதவீதம்), ஜான் டூயி பள்ளி ஓட்டுச்சாவடியில் மொத்தம் 535 ஓட்டுகளில், 347 ஓட்டுகள் (64.8 சதவீதம்), நகராட்சி நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் மொத்தம் 740 ஓட்டுகளில், 452 ஓட்டுகள் (61.08 சதனீதம்) , எம்.ஆர்.ஐ.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் மொத்தம் 898 ஓட்டுகளில், 535 ஓட்டுகள், காகுப்பம் ஊராட்சி ஓட்டுச்சாவடியில் மொத்தம் 855 ஓட்டுகளில், 545 ஓட்டுகள் (63 சதவீதம்) பதிவானது.

Advertisement