மாடி வகுப்பறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்தலாமே: விபத்து அச்சத்தில் தவிக்கும் மாணவர், பெற்றோர்
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் மாடி கட்டடங்களில் வகுப்பறைகள் செயல்படும் பல பள்ளி, கல்லுாரிகளில் உரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாததால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு விபத்து அச்சம் உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் பள்ளிகள் ஓட்டுக்கூரையிலான வகுப்பறைகளுடன் தரைமட்டத்தில் பரந்த நிலப்பரப்பில் செயல்பட்டன. மக்கள் தொகை பெருக்கம், நிலமதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பள்ளிகளை விஸ்தரிக்க போதிய இடம் கிடைப்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது.
இதனால் அரசு, தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் அடுக்குமாடி கட்டடங்களில் செயல்படும் நிலை உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மேல்மாடியில் உயரம் குறைவான பாதுகாப்பற்ற சுவர் மட்டுமே உள்ளன.
இவ்விடங்களில் எல்லை மீறிய விளையாட்டு, தகராறு ஏற்படும் நேரங்களில் மாணவர்கள் கவனக்குறைவாக கீழே விழும் ஆபத்து அதிகம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதம் மாநில, தேசிய அளவில் எதிரொலிக்கும் பிரச்னையாக மாறி விடுகிறது.
இருந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான பள்ளி, கல்லுாரிகளில் மாடி கட்டடங்களில் வகுப்பறைகள் உள்ளதால் மாணவர்கள் எளிதில் தவறி விழும் வாய்ப்புள்ள இடங்களாகவே இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
--------------
அரசு -கண்டிப்பு தேவை -கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி இறந்த சம்பவத்திற்கு பிறகும் சில இடங்களில் மாணவர்கள் கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை சமூகத்தில் பெரிய பிரச்னையாக மாறுகிறது. இதற்காக காத்திருக்கும் சமூக விரோதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் பள்ளி மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடுகின்றனர். மாணவர்கள் தொடர்பான பிரச்னைகள் எளிதாக உணர்ச்சிப்பூர்வமான விஷயமாக மாற்றப்படுகின்றன.
மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மாடி கட்டடங்களில் வகுப்பறைகளுடன் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளில் உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கண்டிப்பு காட்ட வேண்டும்.
- குமரேசன், அ.தி.மு.க., நிர்வாகி, பிலாத்து வாலிசெட்டிபட்டி.-
கரடியாக கத்தினாலும் பலனில்லை
இந்தியாவிலேயே கல்வித்துறையில் முதன்மை என்று பெருமை பேசுகிறார்கள். மொட்டை மாடி மர நிழல் பள்ளிகள் எந்த வசதியும் இல்லாமல் இன்றும் தமிழகத்தில் உள்ளன.மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்