தொழிலாளி பலி

சேலம்; மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம், கொண்டலாம்பட்டி பெரியபுதுார் பகு-தியை சேர்ந்தவர் பழனிசாமி, 50, கூலி தொழி-லாளி. இவர் கடந்த 7ல், தனது வீட்டின் முன் உள்ள மரத்திலிருந்த கிளைகளை அரிவாளால் வெட்டியுள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்ற மின் ஒயர் மீது அரிவாள் பட்டதால், துாக்கி வீசப்-பட்ட பழனிசாமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி, பழனி-சாமி உயிரிழந்தார். அவர் மனைவி மாரியம்மாள் கொடுத்த புகார் அடிப்படையில், கொண்டலாம்-பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement