மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை

5

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., 28) கோலாகலமாக நடைபெற்றது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1brமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.,19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்த நிலையில், நேற்று அம்மன், அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலையான திக்கு விஜயம் நடந்தது.

இதைதொடர்ந்து இன்று காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.



மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளகனிவாய் பெருமாளும், முருகப் பெருமானும் வந்திருந்தனர். இதை காண கட்டண அடிப்படையில் 6 ஆயிரம் பேரும், இலவசமாக 6 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.


திருக்கல்யாணத்திற்காக அம்மன் தாலியுடன் இணைக்கப்படும் குழிபொட்டு தாலி நேற்று சீர்வரிசையுடன் யானைக்கல் லாலா சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்லக்கில் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இன்று 1.50 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து அளிக்க மதுரை சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

29ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக இரு தேர்களிலும் 1732.14 கிலோ எடையில் திருச்சி 'பெல்' நிறுவனம் மூலம் கோயில் நிதி ரூ.35 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட புதிய இரும்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


வைகை ஆற்றில் மே 1ம் தேதி கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு முதல்முறையாக தண்ணீரை மாற்று பாதையில் விட நீர்வளத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் திறக்காமல் கால்வாய் வழியாக செல்லூர் கண்மாய்க்குள் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.



அரை மணி நேரத்திற்கு முன் திறந்தாலே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு தண்ணீர் சென்று விடும். வினாடிக்கு 500 முதல் 600 கன அடி வீதம் மொத்தமாக 7 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement