வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு அனைத்தையும் செய்வேன்: பிரதமர் மோடி உறுதி
காங்டாக்: சிக்கிம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
சிக்கிமில் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஏப்ரல் 28) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவிலிருந்து ஒரு விரைவுச்சாலையை அமைப்பது மற்றும் காங்டாக்கில் ஒரு ரிங் சாலை உருவாக்குவது உள்ளிட்ட சிக்கிமின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கும் விரைந்து செயல்பட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
எட்டு வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் 'அஷ்டலட்சுமிகள்'. இது செழிப்பு, செல்வம் மற்றும் மங்கலத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகும். சிக்கிமின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் சுற்றுலாத் துறை திகழ்கிறது. மாநிலத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். அமைதி, ஆன்மிகம் மற்றும் நல்வாழ்வின் இருப்பிடமாக சிக்கிம் திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகள் இந்த மாநிலத்திற்குப் பெருமளவில் வருகை தர வேண்டும். சிக்கிம் மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், குறிப்பாக கால்பந்து மற்றும் வில்வித்தை போன்ற துறைகளில் உள்ள திறமையாளர்கள் சாதனை படைக்கவும், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை நீண்ட காலமாகப் புறக்கணித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி புறக்கணித்த சிக்கிம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன். சிக்கிம் மாநிலத்திற்கு சுகாதார வசதிகள் செய்தி கொடுக்காமல் காங்கிரஸ் கட்சி முற்றிலும் புறக்கணித்துவிட்டது. தற்போதைய அரசு, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்களுக்குத் தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_P@
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கேங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.block_P
அப்பப்போ அந்தந்த ஊர் கெட்டப்ல போவார். அவரால் முடிஞ்சது.
8 எய்ம்ஸ், 16 ஐ.ஐ.டி, 26 என்.ஐ.டி, 15 விமான நிலையங்கள், 20 புல்கெட் டிரெய்ன் எல்லாம் 2047 க்குள்ளாற வந்துரும்.
கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகள் தற்போது 300 ரூபாய்க்கு பணி செய்கிறார்கள் துபாய்க்கும் கொடைகாகானலுக்கும் ஓய்வெடுக்க சென்று விட்டவர்களுக்கு மத்தியில் ஓய்வெடுக்காமல் தன்னுடைய நாட்டுமக்களின் நலனை பற்றியே சிந்திக்கிற மோடிஜியை திட்டுகிறாங்க இந்த திமுக கும்பலுங்க
பத்து ஆண்டுகள் பாஜக பிரதம மந்திரி பதவியில் அதுதானே நிகழ்கிறது.
கமல் போட்டோ பார்த்தாலே எந்த திரைப்படம் என்று தெரிந்து விடும். அது போல ஜி போட்டோ பார்த்தாலே எந்த ஊருக்கு போய் இருக்கிறார் என்று தெரிந்து விடும்.
ஞானம். ஹி... ஹி..
ஓவொரு ஊருக்கு ஏத்த மாதிரி ஒரு கெட்டப் ....
ஆமாம் நாதன்... புரிஞ்சா நீ புத்திசாலி
இந்தியாவின் பெருமை எகிறும்.
வாசகர்களிடமிருந்து என்னை காப்பாத்திட்டீர்கள்.
நமது பிரதமருக்கு தனிச்சிறப்பு.
வித்தியாசம்......
இந்த திராவிட சம்பள வசைபாடிகள், சும்மா,சும்மா மணிப்பூர்னு பாஜக வை நோக்கி கதறுவதற்கு பதிலாக அங்கு உள்ள பழங்குடி மக்களிடையே வன்மமாக வதந்திகள் பரப்பி அமைதியை குலைக்கும் ஆத்மாக்களை அடக்கி வைக்க இளவரசருக்கு கருத்துடன் கடிதம் எழுதினால் ஏதானது பிரயோசனம் உண்டு. லோக்சபாவில் வெளிநடப்பு செய்து நேரே மணிப்பூர் போய் ஆவிகளை
அடக்குமாறு இளவரசருக்கு யோசனை கூறுங்க இல்லாட்டா நீதிமன்றத்துக்கு யோசனை சொல்லுங்க, மெயின் ஸ்விட்ச் அவங்களிடம் தான் உள்ளது.
மணிப்பூர் இந்தியல தானே இருக்கு பிரதமர் போய் பார்த்தாரா , அங்க கேட்க வேண்டியதை வசதியா மறச்சி இங்க கேட்க சொல்ல மனசு எப்படி வருது
டபுள் என்ஜின் சர்க்கார் னு சொல்லுவாங்க அங்க, அதுல ஒரு என்ஜின் எங்க போச்சு னு கேட்க முடியலையே, இல்ல கேட்க மனசு இல்ல யா , எப்படியும் எலக்ஷன்க்கு முன்னாடி போய்டுவாரு ல
இன்னும் காங்கிரஸ் -அ விட மாடீங்க போல 12 வருசமா நீங்க தான் ஆட்சில இருக்குறத மறந்துடீங்களா ...மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்