ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு

தட்சிணகன்னடா: தட்சி ண கன்னடாவில் அரப்பி தொடு ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர், நீரில் அடித்து செல்லப்பட்டார்.

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவின் மர்தாலாவை சேர்ந்தவர் ரக் ஷித், 26. ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி.

நேற்று முன்தினம் மாலையில், பணி முடிந்ததும், தன் நண்பர்களுடன் ஐத்துார் கிராமத்தில் உள்ள அரப்பி தொடு ஆற்றில் குளிக்கச் சென்றார். ஆற்றில் குளிக்கும் போது, திடீரென தத்தளித்த ரக் ஷித், நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதைப்பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற முடியாததால், கடபா போலீசில் தகவல் தெரிவித்தனர். அவர்க ளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். புத்துாரில் இருந்து தீயணைப்பு படையினரும் வந்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், நடந்து சென்ற போது இரவு நேரமானது. ஆனாலும், மங்களூரை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் ஈஸ்வர் மால்பே, அவரது குழுவினரும் வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், ரக் ஷித் உடலை மீட்டனர்.

ரக் ஷித்திற்கு நன்றாகவே நீச்சல் தெரியும். ஆனாலும், தண்ணீரின் ஆழத்தை தவறாக கணித்ததாலோ அல்லது நீரின் அழுத்தம் திடீரென அதிகரித்ததாலோ இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழு ந்துள்ளது. கடபா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement