டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு

4


புதுடில்லி: டில்லி விவேக் விஹார் பகுதியில் நடந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், இன்று (மே 03) அதிகாலை 3:30 மணிக்கு நடந்துள்ளது.


இன்று அதிகாலை, விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தீப்பற்றி எரிவதாக தகவல் வந்தவுடன் தீயணைக்கும் படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சென்று மீட்பு மற்றும் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், கட்டடத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் தளங்களில் சிக்கியிருந்த 15 பேர் மீட்கப்பட்டனர். இதுவரை அடுக்குமாடியின் இரண்டாம் தளத்தில் இருந்து உடல் கருகிய நிலையில் 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளன. மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்தில் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஹரியானாவில் 5 பேர் பலி



அதேபோல், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வஜிர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement