போதும் கிளம்புங்க; துரைமுருகன் அரசியலுக்கு முடிவு கட்டிய காட்பாடி மக்கள்
- நமது நிருபர் -
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் துரைமுருகன், 87. இந்த தேர்தலில் போட்டியிடும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் வயது மிகவும் வயது முதிர்ந்தவர் அவர் தான்.
காட்பாடி தொகுதி, அவர் காலம் காலமாக போட்டியிடும் தொகுதி. கடந்த 2021 தேர்தலிலேயே அவர், ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகளில், அதுவும் தபால் ஓட்டு எண்ணிக்கையில் கிடைத்த வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
இந்த முறை, அரசின் மீது அதிருப்தி, அவர் மீதான அதிருப்தி எல்லாம் சேர்ந்த கொள்ள, துரைமுருகனை துாக்கி எறிந்து விட்டனர், தொகுதி மக்கள். இந்த முறை அவருக்கு தேர்தலில் கிடைத்தது மூன்றாவது இடம் தான்.
எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் நெருக்கம், நல்ல பேச்சாளர், அனுபவம் மிகுந்தவர் என்ற அவரது பழம் பெருமை எல்லாம் காலிப் பெருங்காய டப்பாவாக கருதி, மக்கள் தோற்கடித்து விட்டனர்.
மேலும்
-
சந்தை விலை நிலவரம் : கச்சா எண்ணெய்/ ரூபாய் மதிப்பு
-
பிரைவேட் ஈக்விட்டி முதலீடு ஏப்ரலில் 32 சதவீதம் சரிவு
-
டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 24,250 புள்ளிகளை கடக்க சிரமப்படலாம்
-
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி
-
காங்கேயம் தொகுதியில் அமைச்சர் மூன்றாமிடம்
-
'விசில்' சத்தத்தில் தகர்ந்த துரைமுருகன் கோட்டை