மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

3


சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை (மே 04) ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்கள் உடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகம் மற்றும் 4 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் பணி நாளை காலை 8:00 துவங்கும். ஓட்டு எண்ணும் அறைக்குள் ஓட்டு எண்ணும் பணிக்கு நியமித்த மேற்பார்வையாளர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறன்றனர். ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் நடந்த தேர்தல் என்பதால் இங்கு யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதில் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக டில்லியில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.


@block_G@

திமுக கடிதம்

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். அவர், ''நாளை ஓட்டு எண்ணிக்கை நாளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போதிய அளவில், பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஜனநாயக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார். block_G

தினமலர்.காம் பாருங்கள்!



தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை (மே 04) தினமலர்.காம் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். இதற்கு அனைத்து பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் நாளை பார்க்க…

Advertisement