வரலாற்று தீர்ப்பு
அசாம் மாநில பா.ஜ., தலைவர் திலீப் சைகியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அசாமில், 55 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் சீர்கெட்ட ஆட்சியை பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்த மக்கள், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக பெண்கள் பா.ஜ.,வுக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட வெற்றி, 2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு கிடைத்த பரிசு. ஒவ்வொரு வாக்குறுதியையும் துல்லியமாக நிறைவேற்றி இருக்கிறோம். அசாம் மாநிலத்தை வளர்ச்சியடைந்த, அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் பா.ஜ.,வின் செயல்திட்டத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்த போலி பிரசாரத்தை அசாம் மக்கள் புறக்கணித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மதுரையில் 10 தொகுதிகளையும் இழந்ததால் அ.தி.மு.க., அதிர்ச்சி
-
கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்
-
தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!
-
பட்டியலின ஓட்டுகளை த.வெ.க.,வுக்கு அள்ளி தந்த ஆதவ் அர்ஜுனா
-
தி.மு.க., முகவர் மாரடைப்பால் உயிரிழப்பு
-
மீண்டும் வெற்றி பெற்ற 'கருணாநிதி சென்டிமென்ட்'