மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
மதுரை: திருமங்கலம் அருகே இருவர் உடல் மீட்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருமங்கலம் மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில், இன்று அதிகாலை வெட்டுக்காயங்களோடு அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்துள்ளார். அவர் மீது அந்த வழியாக சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து ஏறி இறங்கியதில் உடல் மற்றும் முகம் முற்றிலும் சிதைந்து உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் விபத்தா? கொலையா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
அதேபோல் நிலையூர் வண்ணம் பாறை அருகே வெட்டுக் காயங்களோடு வாலிபர் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இறந்து கிடந்தவரின் கையில் மதன் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தன் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.
தற்போது இரண்டு பேரும் ஒரே கும்பலால் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிதம்பரத்தில் ம.ஜ.க., வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ நெய்வேலியில் அ.தி.மு.க.வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ விருத்தாசலத்தில் தே.மு.தி.க., வெற்றி
-
போதும் கிளம்புங்க; துரைமுருகன் அரசியலுக்கு முடிவு கட்டிய காட்பாடி மக்கள்
-
திருக்கோவிலுார் தொகுதி வெற்றி வேட்பாளர் படம்
-
தேர்தல் முடிவுகள்/ திட்டக்குடியில் தி.மு.க., வெற்றி
Advertisement
Advertisement