கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது 17.5 கிலோ பறிமுதல்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே 17.5 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வி.சாலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8:00 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த தேசிங்கு மகன் தேவபிரியன், 19; அழகுவேல் மகன் ஜீவா, 19; நாகமுத்து மகன் நந்தகுமார், 20; மற்றும் ஆசூரைச் சேர்ந்த முருகவேல் மகன் ரவிச்சந்திரன், 19; ஆகியோரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் 17.500 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேவிபிரியன் உட்பட 4 பேரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தங்கள் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
உடன், கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும்
-
சிதம்பரத்தில் ம.ஜ.க., வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ நெய்வேலியில் அ.தி.மு.க.வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ விருத்தாசலத்தில் தே.மு.தி.க., வெற்றி
-
போதும் கிளம்புங்க; துரைமுருகன் அரசியலுக்கு முடிவு கட்டிய காட்பாடி மக்கள்
-
திருக்கோவிலுார் தொகுதி வெற்றி வேட்பாளர் படம்
-
தேர்தல் முடிவுகள்/ திட்டக்குடியில் தி.மு.க., வெற்றி