சூறாவளி காற்றுக்கு சாய்ந்த தென்னைகள்

கொட்டாம்பட்டி, மே 4- கொட்டாம்பட்டி உதினி பட்டி, அய்யாபட்டி பகுதியில் நேற்று இரவு 4 மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் இப்பகுதியில் பயிரிட்டுள்ள மா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்தன.

உதினிபட்டி அருண் கூறியதாவது: வங்கிகளில் கடன் வாங்கி தென்னை, வாழை பயிரிட்டுள்ளோம். காய்கறிகள், தோட்டப் பயிர்கள் மீது சூரிய ஒளி நேரடியாக தாக்காமலும், பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க போடப்பட்ட நிழல்வலை மற்றும் பணியாளர் தங்கும் அறையின் மேற்கூரை சூறாவளி காற்றால் பாதித்துள்ளது.

வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்குவதோடு, பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement