மானாமதுரையில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சால் அவதி

மானாமதுரை:மானாமதுரை அருகே அரசு டவுன் பஸ் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் கோடை வெயிலில் மிகுந்த அவதிப்பட்டனர்.

மானாமதுரையில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. பெரும்பாலான பஸ்கள் புதிய பஸ்களாக மாற்றப்பட்ட நிலையில், ஒரு சில பழைய பஸ்களும் ஓடி வருகின்றன. இந்த பஸ்கள் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும்போது ஆங்காங்கே பழுதாகி நடுவழியில் நிற்பது வாடிக்கையாக உள்ளது.

மே 3 மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து கட்டனூர் கிராமத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ் கால்பிரவு விலக்கு ரோடு அருகே நடுரோட்டில் பழுதாகி நின்றது இதனால் பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் நடுரோட்டில் கோடை வெயிலில் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, மானாமதுரை பகுதியில் அரசு டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் தினமும் பஸ்கள் பழுதாகி நிற்கின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்றனர்.

////

Advertisement