உண்மை என்ற தராசில் 'தினமலர்' உயர்ந்து நிற்கிறது
ஒரு நாளிதழின் 75 ஆண்டு கால பயணம் என்பது, புள்ளிவிபரம் மட்டும் அல்ல, அது ஒரு தலைமுறையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம். அந்த நம்பிக்கை, 'தினமலர்' நாளிதழை, தமிழ் சமூகத்தின் சிந்தனைகளை வடிவமைக்கும் ஒரு பெரும் சக்தியாகவும், சமூக மாற்றத்திற்கான திசைகோலாகவும் உருவெடுக்க செய்துள்ளது.
டிஜிட்டல் மயம், செயற்கை நுண்ணறிவு, உடனடி தகவல் என உலகம் அதிவேகமாக மாறினாலும், 'நம்பகத்தன்மை' மற்றும் அந்த நம்பகத்தன்மை தான் இந்த 75 ஆண்டுகால மகத்தான வெற்றியின் அடையாளம்.
தமிழகத்தின் செய்திகள் மட்டுமல்லாமல், தேசியம், உலகம், வணிகம் என பல்வகை செய்திகளையும் வழங்குவதில் முதன்மையாக திகழ்கிறது. உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை, கடைகோடி கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் பெருமை தினமலரையே சேர்ந்தது.
தினமலர் வெளியிட்டு வரும் 'தொழில்' மற்றும் 'லாபம்' ஆகிய இரண்டு பக்கங்களும் பாராட்டுக்குரியவை. புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வழிகாட்டியாக தொழில் பக்கமும், பங்குச் சந்தை நுணுக்கங்கள் மற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் குறித்து எளிய தமிழில் விளக்கி, சாதாரண முதலீட்டாளர்களும் வருவாய் ஈட்டும் வகையில் லாபம் பக்கமும் உள்ளன.
தமிழ் மொழி, ஆழமான சிந்தனை, சமூக பொறுப்பு ஆகிய மூன்றையும் கையில் பிடித்து முக்கால் நூற்றாண்டை கடந்து நிற்கும் தினமலர் குழுமத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பவள விழா, இன்னும் பல சாதனைகளை படைக்கப்போகும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.
வாழ்த்துகளுடன்,
பொன்முடி.ஆர்
நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, என்ரிச் மனி
மேலும்
-
சிதம்பரத்தில் ம.ஜ.க., வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ நெய்வேலியில் அ.தி.மு.க.வெற்றி
-
தேர்தல் முடிவுகள்/ விருத்தாசலத்தில் தே.மு.தி.க., வெற்றி
-
போதும் கிளம்புங்க; துரைமுருகன் அரசியலுக்கு முடிவு கட்டிய காட்பாடி மக்கள்
-
திருக்கோவிலுார் தொகுதி வெற்றி வேட்பாளர் படம்
-
தேர்தல் முடிவுகள்/ திட்டக்குடியில் தி.மு.க., வெற்றி