ரூ.52 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 52 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் விடப்பட்டது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், முதல் தர கொப்பரை, 899 மூட்டைகளும், இரண்டாம் தர கொப்பரை, 923 மூட்டைகள் விற்பனை ஆனது.

இதில், முதல் தர கொப்பரை ஒரு கிலோ, 140.70 முதல் 153.69 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 80 முதல் 139.80 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலத்தில், 1,822 கொப்பரை மூட்டைகள், 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதன் வாயிலாக, 328 விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 7 பேர் பயனடைந்தனர்.

Advertisement