தி.மு.க., தேர்தல் வரலாறு: ஏற்றத்தாழ்வுகளும் இமாலய வெற்றிகளும்!
- நமது சிறப்பு நிருபர் -
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) கடந்த 60 ஆண்டு கால தேர்தல் பயணத்தில், பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகிய மூன்று தலைமுறைகளைக் கடந்த இந்த நீண்ட பயணத்தில் அக்கட்சி பல வெற்றிகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது.
தி.மு.க தனது தேர்தல் வரலாற்றில் பலமுறை தனிப்பெரும்பான்மையுடன், ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆரம்பக்கால எழுச்சி:
1962-ல் வெறும் 50 இடங்களுடன் தொடங்கிய தி.மு.க, 1967-ல் 137 இடங்களை வென்று அண்ணாவின் தலைமையில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1971-ல் கருணாநிதியின் தலைமையில் 184 இடங்களைக் குவித்து தனது வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.
தனிப்பெரும்பான்மை:
தி.மு.க., தனது தேர்தல் வரலாற்றில், 5 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. 1967 (137 இடங்கள்), 1971 (184 இடங்கள்), 1989 (150 இடங்கள்), 1996 (173 இடங்கள்), 2021 (133 இடங்கள்).
சரிவுகளும் மீண்டெழுதலும்:
1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று பெரும் சரிவைச் சந்தித்தது. இருப்பினும், அடுத்த ஐந்தாண்டுகளிலேயே (1996) மீண்டெழுந்து, 173 இடங்களை வென்று மீண்டும் அரியணை ஏறியது.
சமீபத்திய நிலவரம்:
2011-ல் 23 இடங்களாகக் குறைந்த பலம், 2016-ல் 89 ஆக உயர்ந்து, இறுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் 133 இடங்களுடன், ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஓட்டு சதவீதத்தில் மாற்றங்கள்:
வென்ற இடங்களைப் போலவே, அக்கட்சி பெற்ற ஓட்டு சதவீதமும் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது.
அதிகபட்ச ஓட்டுகள்:
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி மிக உயர்ந்த அளவாக 53.8% ஓட்டுகளைப் பெற்று சாதனை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக 1971-ல் 48.6% ஓட்டுகளைப் பெற்றிருந்தது.
குறைந்தபட்ச ஓட்டுகள்:
1980 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 22.1% மற்றும் 22.4% ஓட்டுகளைப் பெற்று அக்கட்சி பின்னடைவைச் சந்தித்தது.
தற்போதைய நிலை:
கடந்த 2021 தேர்தலில் 37.7% ஓட்டுகளைப் பெற்று தி.மு.க வலுவான நிலையில் இருந்தது. இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம், தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சிக்கு வந்தது இல்லை என்று வரலாறு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி Dengue Malaria Kosu தொல்லை இல்லை. DMK ஒழிந்தது.
எங்க ஒரு உ பி யும் காணம்...ஒ....ஹ ஹ ஹ ஹ ......வெச்சாங்க பாரு ஆப்பு ...இதுதாண்டா மக்கள் தீர்ப்பு ...
கடந்த தேர்தல் மூலம் முதல்வர் [சர்ச்சைகளுடன் கொளத்தூரில் தேர்வு] .... இந்த தேர்தலில் 5000 வாக்குகளுக்கு மேல் பின்னடைவு .....
மாப்ளெயிடம் துக்ளக்கார் - .. நீயி சொன்னன்னு நான் விசையை களமிறக்க ஒத்துக்கிட்டேன்.. இப்போ அந்த டீம் நம்மளையே கவுத்துருச்சேய்யா ......
தமிழகத்தில் பால் தட்டுப்பாடாம். ஏன்? நாளைக்கு படு தோல்வியை சந்தித்த திமுகவுக்கு ஊத்த பால் விற்பனை எதிர்பாராத அளவுக்கு விற்றுப்போய் விட்டதாம்.
that event do not take place the very next day
இது ஆண்டவன் ஆடிய ஆட்டம், மாடலுக்கு தெரிந்ததா இப்போது.
மாறுமா அல்ல. மாறிவிட்டது
இருக் கழகங்களும் கைகோர்த்து கூட்டணி அமைக்கும் நாள் அரசியலில் வரலாம்.திருவாளர் பன்னீர்செல்வம் வழிக் காட்டி உள்ளார்.அரசியலில் இது நடக்காது என்று அடித்துக் கூறமுடியாது.
நாசகார சக்தி , கொள்ளை கும்பல், ஹிந்து மத விரோதி திமுக கும்பலை அடியோடு ஒழித்து கட்டிய தமிழ் மக்களுக்கு நன்றி
what about bjp candidates ? thank people for their defeat too !
அப்பா காலி, சின்ன அப்பா காலி, தீய முக காலி, சினக் பாபு காலி . ஆஹாஹா ஆனந்தம்
murugan kaali thamizhisai kaali vanathi laali Nynaar kaali.