உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., க்கு இறுதி வரை கடும் போட்டி

தியாகதுருகம்: உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., இடையே இறுதி சுற்றுவரை இழுபறி நீடித்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உளுந்துார்பேட்டை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. துவக்கத்தில் இருந்தே தி.மு.க., வேட்பாளர் வசந்தவேல் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றில் வசந்தவேலை விட 468 ஓட்டு குமரகுரு முன்னிலை பெற்றார். ஒன்பது சுற்றும் வரை குமரகுரு முன்னிலை வகித்ததார். 10வது சுற்றில் தி.மு.க., வசந்தவேல் 590 ஓட்டுகளுடன் முன்னிலை பெற்றார். இது 16 சுற்று வரை நீடித்தது. அதன் பின் 17 வது சுற்றில் அ.தி.மு.க., 460 ஓட்டுகள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து 25 வது சுற்றில் தி.மு.க., 365 ஓட்டு பெற்று முன்னிலை பெற்று இறுதி வரை தொடர்ந்தது. முடிவில் குமரகுருவை விட 2,661 ஓட்டுகள் அதிகம் பெற்று தி.மு.க., வசந்தவேல் வெற்றி பெற்றார்.

Advertisement