பள்ளிப்பட்டில் நெசவு பணிகள் தீவிரம்

பள்ளிப்பட்டு, மே 21-–

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நெசவாளர்கள், நெசவு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பட்டை தாலுகாவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுத்தொழில் நடந்து வருகிறது. பாவு தயாரித்தல், விசைத்தறி இயக்குதல், பாவு மற்றும் ஊடை நுாலுக்கு பசை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சொரக்காய்பேட்டை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் நீர்வளம், நுாலுக்கு பசை சேர்க்க பெரிதும் பயனளிக்கிறது.

கொசஸ்தலை ஆற்று நீரில் தயாரிக்கப்படும் பசை, நுாலுக்கு சிறந்த உறுதியை தருகிறது.

இதனால், சொரக்காய்பேட்டையில் நுாலுக்கு பசை சேர்க்கும் பணி பாரம்பரியமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையிலும், சொரக்காய்பேட்டையில் நுாலுக்கு பசை சேர்க்கும் பணி தொய்வின்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதேபோல், விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவு பணிகளிலம் நெசவாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement