உலக சுற்றுச்சூழல் தின விழா

வடமதுரை, ஜூன் 6-

பாகாநத்தம் இந்திய நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் சார்பில் குண்டாம்பட்டி பாறைக்களத்தில் கிராம மாணவர்களான மாலை நேர பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. ஆசிரியை வெண்ணிலா தலைமை வகித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் பேசினர்.

தங்கம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் அய்யலுார் வனக்காப்பாளர் சவடம்மாள் தலைமை வகித்தார். வனக்காவலர்கள் சாருமதி, ரஞ்சித்குமார், கங்காதரசெல்வன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அனுராதா வரவேற்றார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement