இடைக்காட்டூர் சர்ச்சில் முதல் வெள்ளி வழிபாடு

மானாமதுரை, ஜூன் 6-

இடைக்காட்டூர் சர்ச்சில் ஜூன் முதல் வெள்ளி வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மறை மாவட்ட சொத்துக்களின் நிர்வாக செயலாளர் பாதிரியார் சேவியர் ஆரோக்கியசாமி மற்றும் 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் நடந்தது. வழிபாட்டில் விழப்புரம் தமிழக ஆயர் பேரவை எம்மாவுஸ் அருங்கொடை மைய செயல் இயக்குனர் பாதிரியார் ஆல்பர்ட், டில்லி இந்திய சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் சிரில் உள்ளிட்ட பாதிரியார் குழுக்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

அகில உலக கப்புச்சின் சபை இந்திய தொடர்பாளர் பாதிரியார் லாரன்ஸ், பாதிரியார்கள் கலந்து கொண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், பாதிரியார் பிரின்ஸ் மற்றும் மரியின் ஊழியர் சபை அருட் சகோதரிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement