சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
நமது சிறப்பு நிருபர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட புதிய காற்று கசிவு காரணமாக விண்வெளி வீரர்களை வெளியேற தயாராகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நாசா வாபஸ் பெற்றது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் விரிசல் மற்றும் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்திற்குள் தஞ்சம் புகுந்து, அவசரகால வெளியேற்றத்திற்குத் தயாராகுமாறு நாசா உத்தரவிட்டது.
அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த ரஷ்யக் குழுக்கள் அவசரமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டன. தற்போது பிரச்னை சரி செய்யப்பட்டது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் வெளியேற தயாராகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நாசா மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் கூட்டாக வாபஸ் பெற்றன.
கசிவுகள் வெற்றிகரமாக தற்காலிகமாக அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு, வீரர்கள் அனைவரும் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எச்சரிக்கை உத்தரவுகள் அரிதானவை. கடந்த 27 ஆண்டு கால வரலாற்றில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.
விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்
விண்வெளி வீரர்கள் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்