பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
- நமது சிறப்பு நிருபர் -:
சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் தற்போதைய நிலையில், மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், செயல்திறன் மிக்க அமைச்சர்களை நியமிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.,வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு, ஏழு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளதால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மூ ன்றாவது முறையாக பிரதமரான மோடி, தன் மத்திய அமைச்சரவையுடன், 2024ல் ஜூன் 9ம் தேதி பதவியேற்றார்.
இதுவரை ஒரு முறைகூட அமைச்சரவை மாற்றம் நிகழவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் அமைச்சரவை மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என கூறப் படுகிறது.
இந்த மறுசீரமைப்பில், ரயில்வே, நிதி உட்பட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ தன்படி, தற்போதுள்ள பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு ஏற்ப, மத்திய அமைச்சரவையில் மாற்ற ம் நிகழக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
நீக்கம் யார்?
தற்போதைய மத்திய அமைச்சரவையில் யார் நீக்கப்படுவர், யார் உள்ளே வருவர், என்பது இதுவரை யூகங்களாகவே உள்ளன. பிரதமர் மோடியும், அவரது நம்பிக்கைக்குரிய சகாவுமான மத்திய உள்துறை அமை ச்சர் அமித் ஷா மட்டுமே இதை அறிவர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், முதல் இலக்காக, ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் ஆகிய துறைகளை வகிக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருக்கலாம்.
இதில், ஒரு துறையை இவர் தக்க வைக்கலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனவும் நம்பப்படுகிறது.
நம் நாட்டில், 'ஜி - 20' மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியதில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா.
இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அடுத்த கட்டமாக, இவர் அமைச் சர வையில் இடம் பெறவு ம் அதிக வாய்ப்புள்ளது.
இதேபோல், நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளில் குளறுபடி போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் அளித்து வரு கின்றன.
எனவே, அவரது பதவியும் பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
புது முகங்கள்
பா.ஜ.,வின் தேசிய தலைவராக மிக இளம் வயதில் நிதின் நபின் பதவியேற்றது அக்கட்சியில் தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, மத்திய அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது.
ஏற் க னவே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஹர்ஷ் மல்ஹோத்ரா, டில்லி பா.ஜ., தலைவராகவும், பங்கஜ் சவுத்ரி, உ.பி., பா.ஜ., தலைவராகவு ம் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற பா.ஜ.,வின் கொள்கைப்படி, அமைச்சர்கள் கட்சி பொறுப்புக்கு செல்லும்போது, அவர்கள் தங்களின் பதவியை விட்டுக்கொடுப்பர்.
இதன்படி, பலர் கட்சி பொறுப்புக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்படும்.
இதுதவிர, 40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம் தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் அதிக வாய்ப்பு அளிக்கவும் 70 வயதுக்கு மேற்பட்ட சில மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு, கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்படலாம் எனவும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பட்டியலில், மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஹர்தீப்சிங் புரி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோ ர் இடம்பெற வாய்ப்புள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கோருகின்றன.
எனவே, கூட்டணி கட்சியைச் சேர்ந்த சிலரும், கேபினட் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில், செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, பலவீனமானவர்கள் நீக்கப்படுவர். பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வலுவான அமைச்சரவை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மறுசீரமைப்பு வெறும் கண்துடைப்பாக இருக்குமா அல்லது ஆட்சியை வலுப்படுத்தி, 2029ல் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு தே.ஜ., கூட்டணியை தயார்படுத்தும் உண்மையான மாற்றமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தா ன் பார்க்க வேண்டும்.
இந்த நாட்டில் ஊழல் மிக்க அதிகார வர்கம் சொல்வதை குடியரசுத் தலைவர்,பிரதமர்,அமைச்சர்கள் கேட்கின்றனர் மற்றும் அவர்கள் சொல்படி நடக்கின்றனர்.இது மக்களாட்சி அல்ல.இந்த நிலையை மாற்றி குடியரசுத் தலைவர்,பிரதமர்,அமைச்சர்கள் ஆகியோர் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஊழல் மிக்க அதிகார வர்கம் இழைக்கும் கொடுமைகளை களைய வேண்டும்.
திறமைக்கு ஆதரவு அளியுங்கள்
இளம் இந்தியர்களின் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான முடிவு கட்டுங்கள்
ஒரு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அரசு நிறுவனங்கள் / துறைகள் என்பது நிரந்தரமானவை. அவை லாபத்தில் இயங்குகிறதா அல்லது நஷ்டத்தில் இயங்குகிறதா என்பது ஒரு பொருட்டே அல்ல. அவற்றிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகே, மற்றவற்றிற்கு மிச்சம் மீதி கிடைக்கும். இதனால் தான், நாட்டின் மற்ற துறைகளின் வளர்ச்சி மெதுவாக நடக்கிறது. மேலும், விலைவாசி மற்றும் வரி உயர்வுக்கு, இந்த தேவையற்ற / நஷ்டத்தில் இயங்கும் துறைகள் தான் முக்கிய காரணம். இவற்றை ஒழித்துக்கட்டினாலே, அரசுக்கு பல லட்சம் கோடிகள் மிச்சமாகும். இவற்றை நாட்டின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கினால், நாடு மிக விரைவில் மேலும் வளர்ச்சியை எட்டும். இது தான் அடிப்படை வரவு செலவு கணக்கு. இதைவிடுத்து, துறை அமைச்சரை மாற்றுவதால் எந்த புண்ணியமும் இல்லை. ஏனெனில், அரசு வேலை என்பது, ஒரு குறிப்பிட்ட முறையில் இயங்குவது. அரைத்த மாவே அரைக்கும் வேலை. புதிதாக சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், காலத்திற்கேற்ற கல்வி தகுதியை உயர்த்துவது அல்லது திறமையை உயர்த்துவதற்கோ தேவையே இல்லை. ஆனால், சம்பளம் மற்றும் சலுகைகள் மட்டும் உச்சம்.