புழுதி பறக்கும் நான்கு வழிச்சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
அரூர்; அரூர் அருகே, நான்குவழிச்சாலை பணி நடக்கும் நிலையில், முறையாக தண்ணீர் விடாத நிலையில், சாலையில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்-றனர்.
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக, தர்மபுரி - -தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த, 2022 ஐூன்., 19ல் துவக்கி வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக பணி நடந்து வரும் நிலையில், இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. அரூர் நகர் பகுதி நாசன்-கொட்டாய் முதல், செல்லம்பட்டி வரை கடந்த, 7 மாதத்திற்கு முன், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, ரோட்டின் ஒருபுறம் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளன. மற்றொரு-புறம், சாலையில் முறையாக தண்ணீர் விடா-ததால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது, மண் துாசி புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது.
ஆமை வேகத்தில் நடக்கும் விரிவாக்க பணியால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், சில நேரங்களில் நோயா-ளியை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்-களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுகி-றது. எனவே, வாகனங்கள் செல்லும்போது, புழுதி பறப்பதை தடுக்கும் வகையில், சாலையில் முறையாக தண்ணீர் விடுவதுடன், நான்கு வழிச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.