5 ரோட்டில் வரும் 13, 14ல் 'வீல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ'

சேலம்:வர்ஷம் இவென்ட்ஸ், என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், சேலம், 5 ரோடு ஸ்ரீரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், வரும், 13, 14ல், 'வீல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ - 2026' நடக்க உள்ளது.


நவீன கார்கள், இருசக்கர வாகனங்கள், மின்சார வாகனங்கள், சமீபத்திய ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். உலக தரத்தில் சூப்பர் கார்கள், பைக்குகளும் காட்சிப்படுத்தப்படும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


அங்கேயே கார் அல்லது இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. பார்வையாளர்கள் பிடித்த வாகனங்களை தேர்வு செய்து, சிறப்பு சலுகை, உடனடி பரிசுகளை பெறலாம். அதனால் குடும்பத்தினர், இளைஞர்கள், வாகன ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற, இந்த கண்காட்சியை கண்டுகளிக்க வரும்படி, ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement