பருப்பு, பயிர் விற்பனை மந்தம்
கோபி:கோபி அருகே மொடச்சூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில், துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, பாசிப்பருப்பு,
தலா, 140 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் பச்சை பயிர் கிலோ, 150
ரூபாய்க்கும், கடலைப்பருப்பு, 120, கடுகு, 140, சீரகம், 350, வெந்தயம்,
120, பொட்டுக்கடலை 110, மல்லி, 220, கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல்,
தலா 100 ரூபாய்க்கும், வரமிளகாய், 280, புளி, 220, பூண்டு, 240, மிளகு,
900 ரூபாய்க்கும் விற்பனையானது.
பள்ளிகள் திறப்பாலும், சீசன்
இல்லததாலும், பருப்பு மற்றும் பயிர் ரகங்களின் வியாபாரம் மந்தமாக
இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement