6 பேரை கடித்த நாயால் 55 நாய்களுக்கு தடுப்பூசி

கோபி:கோபி அருகே பச்சைமலை ரோட்டில், நான்கு சிறுவர், சிறுமியர் உள்பட ஆறு பேரை, குப்பாண்டவர் வீதியை சேர்ந்த ஒரு மூதாட்டி வளர்க்கும் நாய் கடித்தது.

கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த ஆறு பேரும் நேற்று மதியம் வீடு திரும்பினர். அதேசமயம் ஆறு பேரை கடித்த வளர்ப்பு நாயை, நகராட்சி ஊழியர்கள் பிடித்து, கால்நடை பன்முக மருத்துவமனை அறிவுரைப்படி தனிமையில் வைத்துள்ளனர். பத்து நாட்களுக்கு உணவு தரப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினர்.
அதேசமயம் கோபி கால்நடை பன்முக மருத்துவமனை உதவி மருத்துவர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர், நகராட்சி பணியாளர்கள் இணைந்து, மூதாட்டியின் வளர்ப்பு நாய் வசித்த சுற்றுவட்டார பகுதி யில் உள்ள பிற வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு, 'ரேபீஸ்' தடுப்பூசி போடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இந்த வகையில் குப்பாண்டவர் வீதி, சிவசண்முகம் வீதி, சீதாலட்சுமிபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில், 55 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement