மா.திறனாளிகளுக்கு சேவை அரசு விருதுக்கு அழைப்பு

ஈரோடு:மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் சுதந்திர தினத்தன்று மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது.


இதற்கான சேவையில் ஈடுபட்டுள்ளோர், https://awards.tn.gov.in என்ற வலை தளத்தில் விவரங்களை பதிவு செய்து, கோரப்பட்ட விவரங்களை இணைத்து, வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம் விண்ணப்பித்த இரு நகல்களை, 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் ஈரோடு மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் கந்தசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement