திருமாவுக்கு திருப்பி செய்தது திமுக; ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு ஐக்கியம்

42

நமது நிருபர்



தவெக கூட்டணி அரசில் இணைந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், அவரது கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ., பனையூர் பாபுவை, தங்கள் கட்சியில் திமுக இணைத்துள்ளது.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., எட்டு இடங்களில் போட்டியிட்டது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மூவரும் அதிருப்தியில் இருந்தனர். பாலாஜிக்கு மட்டும் கட்சிப்பதவி வழங்கி திருமா சமாதானப்படுத்தினார். மற்ற இருவரும் சமாதானம் ஆகவில்லை.

சட்டசபை தேர்தலில் இரு இடங்களில் வெற்றி பெற்ற விசிக, விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து கொண்டது. இது, திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை முன்னணி தலைவர்கள் நேரடியாக வெளிப்படுத்தவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தியபடி இருந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் சீட் கிடைக்காத விசிக முன்னாள் எம்.எல்ஏ., பனையூர் பாபு, திருமாவளவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அவரை இன்று தங்கள் கட்சியில் திமுக சேர்த்துக் கொண்டது. அதுவும் கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் விழா நடத்தி, அவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

'தங்கள் எண்ணத்துக்கு மாறாக தவெக அமைச்சரவையில் இணைந்தது மட்டுமின்றி, விஜய் அரசுக்கு ஆதரவாகவும் பேசி வரும் திருமாவுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்' என்கின்றனர், திமுகவினர்.

@block_G@


தாய் வீடு

திமுகவில் இணைந்த பிறகு பனையூர் பாபு பேசுகையில், ''திமுக என்னுடைய தாய் வீடு. கருணாநிதியின் கோடான கோடி தொண்டர்களின் நானும் ஒருவனாக இருந்து பணியாற்றியிருக்கிறேன்” என தெரிவித்தார்.block_G


@block_G@

3 மாதமாவது தாங்குமா?

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் பனையூர் பாபு. திமுகவை பொறுத்தவரைக்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று வந்துள்ள பனையூர் பாபுவையும், அவருடன் வந்துள்ளவர்களையும் நான் மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறோம். இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஏற்கனவே இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் சொன்னேன். 6 மாதத்திற்கு விமர்சனங்கள் ஏதும் பேசப்போவதில்லை. ஆனால் 6 மாதத்திற்கு முன் கூட்டியே பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் தான் இன்றைக்கு இருந்து கொண்டு இருக்கிறது, வந்துவிட்டது. 6 மாதம் அல்ல, 5 மாதம் அல்ல, 4 மாதம் அல்ல, 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியுடன் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இன்றைக்கு திமுகவில் வந்து தன்னை இணைத்து கொண்டு இருக்கிறீர்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.block_G

பிரத்யேக வீடியோ!

திருமாவளவனுக்கு அதிர்ச்சி ஆட்டத்தை துவங்கிய ஸ்டாலின்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement