தேசிய ஸ்னுாக்கர் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

சென்னை: தேசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

இந்திய ஸ்னுாக்கர் சங்கம் சார்பில், அகில இந்திய மோதிலால் ஓஸ்வால் 6 ரெட் ஸ்னுாக்கர் சுற்றுப்போட்டி, கோவாவில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை பி.எஸ்சி., கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணன், 18, ஜூனியர் பிரிவில் போட்டியிட்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லட்சுமி நாராயணன், அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Advertisement