போலீசார் நடை ரோந்து

அவிநாசி நகராட்சிப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலை, மாலை வேளைகளில் போலீசாரின் அதிரடி நடை ரோந்து கண்காணிப்புப் பணி நடைபெற்றது.

எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் இந்தத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகள், நகைக்கடைகள் நிறைந்த ரத வீதிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இந்த நடை ரோந்து மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement