என்.எல்.சி.,யில் உலக சுற்று சூழல் தின கொண்டாட்டம்
நெய்வேலி ஜூன் 8–: என்.எல்.சி.,யில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்ட விழா நடந்தது. என்.எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா தலைமை தாங்கினார்.
என்.எல்.சி., சுற்றுசூழல் துறையின் செயல் இயக்குனர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உள்ளூர் நாட்டு மர வகைகளின் பங்கு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நெய்வேலி விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் (பழம் தரும் மர வகைகள்) நடும் இயக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில்,உள்ளூர் நாட்டு மரங்கள் மற்றும் பழம் தரும் மர வகைகள் நடும் விழா நடந்தது.
என்.எல்.சி., இயக்குனர்கள் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா மற்றும் சுரேஷ் சந்திர சுமன் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், அதன் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனித முயற்சியின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக , என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர், நெய்வேலியை சுற்றியுள்ள உள்ளூர் கிராமங்களில், நீர் பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், வடக்குத்து மற்றும் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில், உள்ளூர் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கழிவுகளைச் சேகரித்தல், கையாளுதல், தரம் பிரித்தல் மற்றும் கழிவுகளைக் குறைத்தல் ஆகியன குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் துாய்மை, தனிநபர் சுகாதாரம் மற்றும் சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில், பொதுமக்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை முதன்மையாகக் கொண்டு இந்த இயக்கம் நடத்தப்பட்டது.