வீரானார் கோவிலில் கும்பாபிேஷகம்
சேத்தியாத்தோப்பு: வீரனார்கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிேஷக யாக பூஜை கடந்திப, 5 ம் தேதி மாலை வாஸ்துசாந்தி நடந்தது.
நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மேல் பசு வழிபாடு, கணபதி வேள்வி, இறையானை பெறுதல், தீபாராதனை, புனிதநீர் வழிபாடு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள் திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு புறப்படுதல், முதற்கால வேள்வி, திரவியாகுதி, நிறையாகுதி, மலர்வழிபாடு, திருமுறை, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால யாகம் ஆரம்பம் நடந்தது. தொடர்ந்து, 8:00 மணிக்கு திரவியாகுதி, பூரணாகுதி தீபாராதனையும், 8:50 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:40 மணிக்கு விமான கலசத்திற்கு புனித கங்கை நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
10:00 மணிக்கு மூலவர் வீரானார் சப்தகன்னிகள், கருப்பசாமி, விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் தீபாராதனை நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.