இளம் பெண் மாயம் போலீசில் புகார்

வடலுார்: இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி, பெரிய வீராணம்பட்டினம், நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் சவிதா, 21; இவர் குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம் பகுதியில் உள்ள பிரகாஷ், 35, என்ற தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று வீட்டில் இருந்த சவிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து சவிதா மாயமானது குறித்து பிரகாஷ், வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement