மின்துறையில் பணி ஆணை வழங்க முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரி: முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு மின்துறையில் பணி ஆணை வழங்க கோரி, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்க தலைவர் மோகன் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள கோரிக்கை மனு;

மின்துறையில் கட்டுமான உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களாக பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளது. இதில், முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்க உறுப்பினர்கள் 16 பேருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அப்போது, சங்க பொது நலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement