மிதிவண்டி நாள் விழிப்புணர்வு பேரணி 

விருத்தாசலம்;விருத்தாசலத்தில் உலக மிதிவண்டி நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஆர்.டி.ஒ., விஷ்ணுபிரியா, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், எலைட் ரோட்டரி கிளப் தலைவர் குமார் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

ஆசிரியர் புகழேந்தி தலைமையில், ரோட்டரி சங்க பொறுப்பாளர் கிருஷ்ணன், முத்து மாணிக்கம், மணி, டெல்டா ரைடர்ஸ் கார்த்திகேயன், செந்தில்குமார், அன்புமணி, தொழிலதிபர் ஆனந்தன், டாக்டர் தவமணி, சந்திரசேகர், ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், ஆனந்த முருகன், தொழில் முனைவோர் பாலசிவானந்தம், சத்தியமூர்த்தி, மணிமாறன், பாலகுருசாமி, சிறுமி ரக்ஷனா, ஆசிரியர் சேரன், ஆடிட்டர் முருகேசன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கார்த்திக் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி துவங்கி, கடைவீதி, நகராட்சி அலுவலகம் அரசு கலை கல்லூரி வழியாக மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வந்தடைந்தது.

இதில், பங்கேற்றவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் அசோக்குமார், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் குருசாமி ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

முடிவில், ரத்தின புகழேந்தி நன்றி கூறினார்.

Advertisement