சமூக வலைதளங்களில் வரும் ஊழல் புகார்களை கண்காணிக்க குழு அமைப்பு
சென்னை: சமூக வலைதளங்களில் வெளியாகும் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான புகார்களைக் கண்காணிக்க லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ் சமூக ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; சமூக வலைதளங்களில் வெளியாகும் ஊழல் குறித்த தகவல்கள், பொதுமக்களின் புகார்கள், மற்றும் ஸ்டிரிங் ஆபரேஷன்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை இந்த சமூக ஊடக கண்காணிப்பு மையம் மேற்கொள்ளும். இந்த மையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள், மூன்று தலைமைக் காவலர்கள் என மொத்தம் 10 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், சுமார் ரூ.20 லட்சம் செலவில் வெற்றிப் பாதை என்ற பிரத்யேக செயலி அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த செயலியின் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நேரலை மற்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள், மாதிரித் தேர்வுகள், வினா வங்கிகள் மற்றும் செயல்திறன் கண்காணிப்பு பகுப்பாய்வு போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
மகளை காணவில்லை தாய் போலீசில் புகார்
-
பீஹாரில் சத்துணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 40 பேர் மயக்கம்: உப்புக்கு பதில் சோப்பு பவுடர் கலந்தது விசாரணையில் அம்பலம்
-
வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
செய்தி சாரல்