மகளை காணவில்லை தாய் போலீசில் புகார்
விருத்தாசலம்: காணமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கணபதிகுறிச்சியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி மீனா, 26. இருவரும் காதலித்து 6 ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு மீனாவிடம் தகராறு செய்து வந்தார். அவ்வாறு கடந்த 17 ம் தேதி சத்தியமூர்த்தி குடித்துவிட்டு மீனாவிடம் தகராறு செய்தார்.
இதில், மனமுடைந்த மீனா வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மீனாவின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மீனாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement